நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் வெளிட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷ் படம்
தனுஷ் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கி இருக்கிறார். ராஷிகண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
அப்டேட்
இதனையடுத்து தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வரும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. அதனைத்தொடர்ந்து வருகிற 28ம் தேதி டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#Vaathi #Sir pic.twitter.com/UzrDY0Nkmx
— Dhanush (@dhanushkraja) July 25, 2022

