தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம் படம்
யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் மித்ரன் ஜவஹர், நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
செகண்ட் சிங்கிள்
இதன்பெயரில் அனிருத் இசையில் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தின் தாய்கிழவி என்ற பாடல் வெளியானது. இதனையடுத்து இந்த படத்தின் ‘மேகம் கருக்காதா’ என்ற இரண்டாவது பாடல் வரும் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
#Thiruchitrambalam second single #MeghamKarukkatha releasing on July 15@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @AlwaysJani @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/e8nIDJ1Uaw
— Sun Pictures (@sunpictures) July 13, 2022

