அரசியல்இந்தியா

டெல்லியில் 144 தடை உத்தரவு – பிரியங்கா-ராகுல் காந்தி கைது !

விலைவாசி உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

144 தடை உத்தரவு

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து காங்கிரஸ் கட்சியினர் மனு அளிக்க குவிந்தனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி வீட்டையும் முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் நிலவியது. போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரஸ்க்காரகர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில், விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்.

Related posts