Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»19 பந்துகளில் அரை சதம் விளாசி தசன் ஷனகா சாதனை: இலங்கை அணி அபார வெற்றி

19 பந்துகளில் அரை சதம் விளாசி தசன் ஷனகா சாதனை: இலங்கை அணி அபார வெற்றி

February 13, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் ‘பி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இலங்கை – ஓமன் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 225 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீரர்​களான கமில் மிஷாரா 8 ரன்னில் ஜெய் ஒடெட்ரா பந்​தி​லும், பதும் நிசங்கா 13 ரன்னில் சூஃப்​யான் மெஹ்மூத் பந்​தி​லும் நடையை கட்​டினர். இதையடுத்து விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான குஷால் மெண்​டிஸுடன் இணைந்த பவன் ரத்​னாயகே அதிரடி​யாக விளையாடினார். பவன் ரத்​னாயகே தனது முதல் அரை சதத்தை 24 பந்​துகளி​லும், குஷால் மெண்​டிஸ் தனது 19-வது அரை சதத்தை 39 பந்​துகளி​லும் கடந்​தனர்.

50 பந்​துகளில், 94 ரன்​கள் குவித்த இந்த ஜோடியை சூஃப்யான் மெஹ்மூத் பிரித்​தார். பவன் ரத்​னாயகே 28 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜிதேன் ராமானந்தி பந்​தில் போல்டானார். இதைத் தொடர்ந்து களமிங்​கிய கேப்​டன் தசன் ஷனகா, ஓமன் அணி​யின் பந்​து​வீச்சை வெளுத்து வாங்கி 19 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார்.

இதன் மூலம் சர்​வ​தேச டி 20 அரங்​கில் குறைந்த பந்​துகளில் அரை சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்​தார் தசன் ஷனகா. இதற்கு முன்​னர் அவர், கடந்த 2023-ம் ஆண்டு இந்​தி​யா​வுக்கு எதி​ராக புனே​வில் நடை​பெற்ற இருதரப்பு டி 20 தொடரின் ஆட்​டத்​தில் 20 பந்துகளில் அரை சதம் அடித்​ததே சாதனை​யாக இருந்​தது. தனது சாதனையை தற்​போது அவரே முறியடித்து புதிய சாதனை படைத்​துள்​ளார்.

இதையும் படிக்க :  T20 WC 2026: பாகிஸ்தானின் சுழல் ஆயுதம் இந்தியாவிடம் எடுபடுமா? - கொழும்பு நகரில் இன்று பலப்பரீட்சை

ஓமன் அணிக்கு எதி​ராக சாதனை அரை சதம் விளாசிய அடுத்த பந்​திலேயே தசன் ஷனகா ஆட்​ட​மிழந்​தார். 20 பந்துகளை எதிர்​கொண்ட தசன் ஷனகா 5 சிக்​ஸர்​கள, 2 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் எடுத்​தார். நிதான​மாக விளை​யாடிய குஷால் மெண்​டிஸ் 45 பந்​துகளில், 7 பவுண்டரி​களு​டன் 61 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரன் அவுட் ஆனார்.

இறு​திக்​ கட்ட ஓவர்​களில் கமிந்து மெண்​டிஸ் 7 பந்​துகளில், 19 ரன்​களும், துனித் வெல்​லாலகே 4 பந்​துகளில், 6 ரன்களும் சேர்த்​தனர். ஓமன் அணி தரப்​பில் ஜிதேன் ராமானந்தி 2 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். 226 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஓமன் அணி​யால் 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 120 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது.

அதி​கபட்​ச​மாக முகமது நதீம் 56 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​கள் சேர்த்​தார். அவருக்கு அடுத்​த​படி​யாக வசீம் அலி 20 பந்​துகளில் 27 ரன்​கள் எடுத்​தார். மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. இலங்கை அணி தரப்​பில் தீக்​ச​னா, துஷ்மந்தா ஷமீரா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்தினர். துனித் வெல்​லால​கே, துஷான் ஹேமந்​தா, கமிந்து மெண்​டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்றினர்.

இதையும் படிக்க :  ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆட்ட நாயக​னாக பவன் ரத்​னாயகே தேர்​வா​னார். 105 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி முதல் ஆட்​டத்​தில் அயர்​லாந்தை வீழ்த்​தி​யிருந்​தது. 2 வெற்றிகளின் மூலம் இலங்கை 4 புள்​ளி​களு​டன் தனது பிரிவில் முதலிடத்​தில் உள்​ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் ஓமன் அணி​யின் முகமது நதீம் அரை சதம் அடித்​தார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெரு​மையை நதீம் பெற்​றார். அவருக்கு 43 வயது 161 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்​னர் இலங்​கை​யின் சனத் ஜெயசூர்யா (39 வயது 345 நாட்​கள்) கடந்த 2009-ம் ஆண்டு நடை​பெற்ற டி 20 உலகக் கோப்​பை தொடரில்​ அரை சதம்​ அடித்​ததே சாதனை​யாக இருந்​தது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇத்தாலிக்கு முதல் வெற்றி – சகோதர ஜோடி சாதனை!
Next Article மானநஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.