சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்துள்ளதால், சாமானிய மக்கள் நகையை நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஆபரணத்தங்கத்தின் விலை ஓரளவுக்கு சரிந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன் தினம் மார்ச் 23ஆம் தேதி வரலாற்றிலேயே 2வது முறை 3 முறை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. காலை, மாலை என இரண்டு வேளையிலும் தங்கம் விலை குறைந்த நிலையில், திடீரென மாலையில் அதிகரித்தது.
தொடர்ந்து நேற்று மார்ச் 24ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சரிவை கண்டது. பிறகு மாலை வேளையில் உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது. கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,06,000க்கும், கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ரூ.13,250க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.108,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும் சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

