தென்னிந்திய உணவு வகைகளில் முதன்மையான இடத்தை கொண்டுள்ள இட்லியை கொண்டாடும் வகையில் கூகுள் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆளுமைகளின் பிறந்தநாள் பண்டிகை நாட்கள் முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.
இன்று கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம் அதற்கு காரணம் நமது கலாசார உணவினை பிரபலப்படுத்துகிறது.
அரிசி மற்றும் உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான வேகவைத்த தென்னிந்தியாவின் உணவான இட்லியை கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்டு இருக்கிறது கூகுள்.
அந்த அனிமேஷனில் கூகிள் என்ற வார்த்தை இட்லி சாம்பார் மற்றும் சட்னியைப் பயன்படுத்தி பொறிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் சமையல் கலாசாரத்தில் இட்லிக்கு முதன்மையான இடம் உண்டு.
பண்டிகை நாட்களில் இந்திய குடும்பங்களில் தவிர்க்க முடியாத உணவு பதார்த்தமாக இட்லி இருக்கிறது.
இட்லி பாரம்பரியமாக அரிசி மற்றும் உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
வயிற்றுக்கு இதமான உணவு பதார்த்தமான இட்லி புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது.
அவற்றின் ஆவியில் வேக வைக்கும் தயாரிப்பு முறை, கொழுப்பைக் குறைக்கிறது.
இதனால் ஆரோக்கிய உணவுகளை விரும்பி சாப்பிடும் உணவு பிரியர்களிடையே இட்லிகள் மிகவும் பிடித்தமானவையாக உள்ளன.

