பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நாயுடன் ஒப்பிட்டு பாஜக அமைச்சர் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அமைச்சர்
பீகார் மாநிலத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சியை நிதிஷ் அமைத்துள்ளார். இதன்மூலம், தனது கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றும் பாஜகவின் திட்டத்தை நிதிஷ் முறியடித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் அவரை பாராட்டி வருகின்றன. இது பற்றி செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் கூறுகையில், ‘பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. ஆனால், 2024ம் ஆண்டு தேர்தலை பற்றி பாஜக நிச்சயமாக கவலைப்பட வேண்டும்’ என கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில், ‘ஒரு நாய் 2 சிங்கங்களுடன் சண்டையிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு, அதற்கு சவால் 2024 என்று தலைப்பு’ வைத்தார். இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

