சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் இயங்கும் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழு மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், அவர்களின் கட்சியின் முழுமையான ஆதரவு நம் NDA கூட்டணிக்கு இருக்கும் என்பதை உறுதியளித்தனர்.
இதில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மாநில பொருளாளர் நேருநகர் நந்து , தலைமைக் கழக செயலாளர் இரா. சந்திரசேகர் , மாநில துணைத்தலைவர் கே.என். இன்பசேகரன் , மாநில விவசாய அணி செயலாளர் கே.எஸ். மணி , மாநில இளைஞரணி செயலாளர் என். லோகநாதன், கோவை மேற்கு மாவட்ட செயலாளர் கொங்கு ஆர். பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

