முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சாதி பெயரை கூறி இழிவுபடுத்திய விவகாரம் தமிழக அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இல்லத்திற்கு வரச்சொன்ன போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது பரிந்துரைகளை எதையும் நிறைவேற்ற மறுப்பதாக கூறி ராஜேந்திரனை சாதி பெயரை கூறி இழிவாக பேசியதாக தெரிவித்துள்ளார் ராஜேந்திரன்.
மேலும், தான் நேர்மையாக செயல்பட முயன்ற காரணத்தினாலேயே தம்மை அமைச்சர் இவ்வாறு இழிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கும் ராஜேந்திரன், இந்த விவகாரத்தை பட்டியலின ஆணையத்திற்கும் கொண்டுசெல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சாதி – மத ரீதியிலான பாகுபாடுகளை உண்டாக்க முயல்பவர்களை இந்த அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.