Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, September 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»‘ஏன் ஆல்-ரவுண்டர்கள் தேவை?’ இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை விமர்சித்த அக்ஸர் படேல்

‘ஏன் ஆல்-ரவுண்டர்கள் தேவை?’ இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை விமர்சித்த அக்ஸர் படேல்

March 24, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐபிஎல் தொடரில் நடைமுறையில் உள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி ஆல் ரவுண்டர்களுக்கு எதிராக உள்ளது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தொடருக்காக தீவிரமாக தயாராகும் வகையில் பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான அக்ஸர் படேல், ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறையானது ஆல் ரவுண்டர்களுக்கு எதிராக உள்ளது என்ற கருத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அக்ஸர் படேல், “ஐபிஎல் தொடரில் உள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறையானது எனக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் நான் ஒரு ஆல்-ரவுண்டர். முன்னெல்லாம் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் கருத்தில் கொண்டுதான் நாங்கள் ஆல்-ரவுண்டர்களைத் தேர்வு செய்வோம். ஆனால் இந்த இம்பேக்ட் வீரர் விதியால், ஒவ்வொரு அணி நிர்வாகமும் ஒரு குறிப்பிட்ட பேட்டர் அல்லது பவுலரை மட்டுமே தேர்வு செய்கிறார்கள்.

இதையும் படிக்க :  'இந்த மாதிரி எனக்கு இதுவரை நடந்ததே இல்லை' - பரபரப்பு ட்வீட் ! சென்னை ஏர்போர்ட்டில் ஸ்பானிஷ் செஸ் வீரருக்கு நடந்தது என்ன ?

அதனால் தற்போது ஏன் ஆல்-ரவுண்டர் தேவை? என்ற கேள்விகளும் உருவாகத் தொடங்கியுள்ளது. எனவே, ஒரு ஆல்-ரவுண்டராக எனக்கு இந்த விதிமுறைகள் பிடிக்கவில்லை. அதே சமயம், விதிமுறை என்று இருந்தால் நாம் அதைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும். ஆனால், எனது தனிப்பட்ட கருத்தைப் பொறுத்தவரை எனக்கு இந்த விதி பிடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இம்பேக்ட் வீரர் விதிமுறையானது 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் போது பரிசோதிக்கப்பட்டது. அதன்பின் ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறையை பிசிசிஐ அமல்படுத்தியது. அப்போதே இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் பிசிசிஐ அடுத்தடுத்த சீசன்களில் இந்த விதியை பின்பற்றி வருகிறது.

இதையும் படிக்க :  செஸ் ஒலிம்பியாட் : தங்கம், வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் !

பின்னர் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து பேசிய அக்ஸர் படேல், “டெல்லி அணியின் கேப்டனாக இது எனக்கு இரண்டாவது ஆண்டு. எனவே ஒரு அணியாக நாம் எப்படி விளையாட வேண்டும் என்பதில் எனக்கு கூடுதல் தெளிவு இருக்கிறது. கடந்த சீசனில், களச் சூழல்கள், வீரர்கள் மற்றும் ஒரு கேப்டனாக என்னைப் பற்றியும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். வீரர்களுக்குப் பின்னால் அணி நிர்வாகம் துணை நிற்கிறது என்ற எண்ணம் வரும்போது, சிறந்த செயல்பாடுகள் தானாகவே வெளிப்படும். அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏப்ரல் 1ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும், ஏப்ரல் 8ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராகவும், ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு
Next Article ஐபிஎல் 2026: சிஎஸ்கே-வில் ஸ்பென்சர் ஜான்சன்; சாம் கரண், ஆகாஷ் தீப்பிற்கு மாற்று வீரர்கள் அறிவிப்பு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,948 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,166 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,161 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,948 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,166 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,161 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.