H.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே பாபி தியோல் மமிதா பைஜூ பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
ஜனநாயகன் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு நேற்று முன்தினம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ‘தளபதி கச்சேரி’ எனத் தொடங்கும் அந்த பாடல் இன்று மாலை 6.03க்கு வெளியாகிறது என KVN புரொடக்ஷன்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் விஜய் குரலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜன நாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீடு குறித்து அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
அதன்படி படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து ‘ஜன நாயகன்’ படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

