எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பு வடசென்னை பகுதியில் நடைபெற்று வருகிறது.
ஏ.கே. 61 படம்
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் வலிமை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படம் ஏ.கே.61. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
வடசென்னையில் படப்பிடிப்பு
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனையடுத்து அஜித் ஐரோப்பாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார். இந்நிலையில், அஜித் இடம்பெறாத காட்சிகளை இயக்குனர் வினோத் வடசென்னை பகுதியில் படமாக்கி வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் எச்.வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

