Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»பறக்கும் படையில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

பறக்கும் படையில் மத்திய அரசு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

March 17, 20262 Mins Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேர்​தல் பறக்​கும் படை​யில் மத்​திய அரசு அதி​காரி​களை நியமிக்க வேண்​டும் என்று அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​கள் பங்​கேற்ற கூட்டத்தில் அதி​முக சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மாநிலம் முழு​வதும் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ளன. இது தொடர்​பாக அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளுக்கு விளக்​கு​வதற்​கான கூட்​டம், தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெற்​றது. இதில் பிரச்​சா​ரம் தொடர்​பாக சுவிதா இணை​யதளம் வழி​யாக மட்​டுமே விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டது.

கூட்​டத்​தில் பங்​கேற்ற கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் கூறிய​தாவது:

ஆர்​.எஸ்​.​பாரதி (தி​முக): தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்​ள​தால் சிலைகள் மூடப்​படும் என கூறுகின்​றனர். அதே நேரத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம் ஒரு வழக்​கில், உயிரோடு இருப்​பவர்​கள் சிலைகளை மட்​டும்​தான் மூட வேண்​டும் எனவும், மறைந்த தலை​வர்​களின் சிலைகளை மூட வேண்​டிய​தில்லை எனவும் குறிப்​பிட்​டுள்​ளது. இதை திமுக வலி​யுறுத்​தி​யது.

குறிப்​பாக, அம்​பேத்​கர் பிறந்​த​நாள் ஏப்​.14-ம் தேதி வர உள்​ளது. ஆகவே அது​போன்ற சிலைகளை மூடு​வ​தால், பிரச்​சினை​கள் வரும் என தெரி​வித்​துள்​ளோம். அதி​முக​வினர் திமுக மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை வைத்​துள்​ளனர். அவர்​கள் தோல்விக்​கான காரணத்தை இப்​போதே தெரிவிக்க தொடங்​கி​விட்​டனர்.

டி.ஜெயக்​கு​மார் (அதி​முக): துணை வாக்​காளர் பட்​டியலை அனைத்து கட்​சிகளுக்​கும் வழங்க வேண்​டும். கடந்த காலங்​களை​போல் இல்​லாமல் வெளிப்​படை தன்​மை​யுடன் வாக்​காளர் பட்​டியல் இருக்க வேண்​டும். தேர்​தல் விதி​மீறல் தொடர்​பாக பாரபட்​சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்​டும். மறைந்த தலைவர்​களின் படங்​களை மறைக்​கக் கூடாது.

இதையும் படிக்க :  செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி - அண்ணாமலை தாக்கு !

பறக்​கும் படைகள் ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வாக இருக்க வாய்ப்​புள்​ள​தால், அதில் மத்​திய அரசு அதி​காரி​களை நியமிக்க வேண்​டும். தேர்​தல் பணி​யில் ஈடு​படும் அதி​காரி​கள் 3 ஆண்​டு​களுக்​குமேல் ஒரே இடத்​தில் பணி புரிந்​தால் அவர்​களை பணி​யிட மாற்​றம் செய்ய வேண்​டும். தபால் வாக்​கு​களை அரை மணி நேரத்​தில் எண்ணி முடிக்க வேண்​டும் என தெரி​வித்​திருக்​கிறோம்.

கே.​வி.தங்​க​பாலு (காங்​கிரஸ்): தேசிய தலை​வர்​கள் இங்கு வந்து பிரச்​சா​ரம் செய்​யும்​போது ஒரு வேட்​பாளர் மட்​டுமில்​லாமல், பல வேட்​பாளர்​களுக்கு பிரச்​சா​ரம் செய்​வார்​கள். அப்​போது, குறிப்​பிட்ட வேட்​பாள​ருக்கு மட்​டும் தேர்​தல் செலவை இணைக்​காமல், அந்த கட்​சி​யில் செலவு கணக்கை தேர்​தல் ஆணை​யம் சேர்க்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி இருக்​கிறோம்.

பிரச்​சா​ரம் செய்ய ஒவ்​வொரு கட்​சிக்​கும் 40 தலை​வர்​கள் நியமனம் செய்​யப்​பட்​டிருக்​கிறார்​கள். அவர்​கள் ஒரு குறிப்​பிட்ட கார் மட்​டும் இல்​லாமல் எந்த காரில் வேண்​டு​மா​னாலும் வந்து பிரச்​சா​ரம் செய்​யும் வகை​யில் தேர்​தல் ஆணை​யம் அறிவிக்க வேண்​டும், செலவு கணக்கை வேட்​பாளர்​கள் பதிவு செய்த நாட்​களில் இருந்து கணக்​கீடு செய்ய வேண்​டும் என்று கூட்​டத்​தில் வலி​யுறுத்தி இருக்​கிறோம்.

இதையும் படிக்க :  “விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது” - அண்ணாமலை பதில்

கராத்தே தியாக​ராஜன் (பாஜக): சென்னை மாவட்​டத்​தில் கண்​காணிப்​புக் குழு வாக​னத்​தில் உதவி பொறி​யாளர் நிலை​யில் உள்ள அதி​காரி​களை​தான் நியமனம் செய்​துள்​ளனர். வாக​னத்​தில் இடம்​பெற்​றுள்ள வீடியோகி​ராபர்​கள் குறித்​தான தகவல்​கள் முறை​யாக தெரிவிக்​கப்​பட​வில்​லை. வேட்​பாளர்​கள் ரூ.1 லட்​சத்​துக்கு மேலான பண பரிவர்த்​தனை​களை ஆன்​லைன் மூலம் செய்​யக்​கூ​டாது என சொல்லி உள்​ளனர். பல உயர் காவல்​துறை அதி​காரி​கள் மாற்​றப்​ப​டா​மல் இருக்​கிறார்​கள். அது குறித்​தும் புகார் அளித்​தோம்.

பெரிய​சாமி (இந்​திய கம்​யூனிஸ்ட்): வாக்​குப்​ப​தி​வின்​போது முது​நிலை மருத்​து​வம், செவிலியர் கல்வி பயில்​வோருக்கு விடு​முறை இல்​லை. அவர்​களுக்கு அஞ்​சல் வாக்​கு​கள் வழங்க வலி​யுறுத்தி உள்​ளோம். தேர்​தலுக்கு 3 நாட்​கள் முன்​பாக டாஸ்​மாக் கடைகளை மூட வலி​யுறுத்​தினோம்.

செந்​தில்​கு​மார் (நாம் தமிழர்): நாம் தமிழர் கட்​சி​யில் 25 வயதுடைய வேட்​பாளர்​கள் அதி​கம். தற்​போது அந்த வயதை எட்​டா​மல் சிலர் இருந்​தா​லும் வேட்​புமனு பரிசீலனை நடை​பெறும்​போது அவர்​கள் அனை​வரும் 25 வயது பூர்த்தி அடைந்​திருப்​பர் என்​பதை கவனத்​தில் கொள்​ளு​மாறு கூறினோம். வாக​னங்​களில் கட்சி கொடி கட்ட அனு​ம​திக்க கூறினோம். நாம் தமிழர் கட்சி சின்​னம் இந்த முறை​யும் தெளி​வாக இல்​லை. அது வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தில் தெளி​வாக தெரி​யும்​படி வலி​யுறுத்​தினோம். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி
Next Article தமிழகத்தில் போதை தாக்குதல்கள் வாடிக்கையாகிவிட்டது: நயினார் நாகேந்திரன்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.