அரசியல்இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு : போராட்டத்தில் ஈடுப்பட்ட ராகுல் காந்தி கைது !

அமலாக்கத் துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இயக்குநர்களாக உள்ள, யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாக கோரி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் கடந்த வாரம் சோனியா காந்தியிடம் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கைது 

அதனைத்தொடர்ந்து இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகினார். இதனை எதிர்த்து டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். மேலும், பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அவர்களை காவல் துறையினர் கைது செய்து வேறு இடத்திற்கு அழைத்து சென்றனர்.

Related posts