கஞ்சா போதைக்கு அடிமையானதால் மகனின் கண்களில் மிளகாய் பொடியை தேய்த்து தண்டித்த தெலுங்கானா பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த ரம்நா எனும் இந்த பெண்மணி, 15 வயது நிரம்பிய தனது மகனை பலமுறை திருத்த முயன்றும் பலனில்லை என்றும், கடைசி முயற்சியாக அவனை கடுமையாக தண்டிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
முதலில் அவனை கம்பத்தில் கட்டி வைத்து மிளகாய் பொடியாய் பூசிய அவனது தாயார், பின் கட்டவிழ்த்து மற்றொரு பெண்ணின் உதவியுடன் மீண்டும் இந்த வன்செயலில் ஈடுபடுகிறார்.

ரம்னா தனது குழந்தையை தண்டிக்கும் முறையை ஒரு பிரிவினர் ஆதரித்தாலும், சிலர் அவரது வன்முறை நடத்தைக்காக அவருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று இணையத்தில் குரல் எழுப்பி
வருகின்றனர்.
கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்ப்பது கிரிமினல் குற்றமாகும். மேலும் 15 வயதான மகனை இப்படி சித்ரவதை செய்வதால் இது சிறார் வன்கொடுமைக்கு கீழ் கருத்தில் கொள்ளப்பட்டு தாயாருக்கு உரிய தணடனை அளிக்கப்பட வேண்டும் என்பதே சட்டமாகும். இந்த செயலை எவர் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
மறுவாழ்வு மையத்திற்கு சென்று முறையாக அந்த சிறுவனை போதை பழக்கத்தில் இருந்து வெளிக்கொணர வேண்டும். இவர்களால் தான் நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு நிகழ்கிறது தண்டனை சரியே என மக்கள் வாதிட்டாலும், உண்மையில் அதிக பாதிப்பும் அவமானமும் அந்த சிறுவனுக்கு தான். இது அவனது மனதில் கோபத்தையும் பழியுணர்வையுமே தூண்டும்.
குழந்தைகளை நெறிப்படுத்தி வளர்க்க வன்முறை என்றும் தீர்வாகாது.
