சினிமாவெள்ளித்திரை

உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன் – சமந்தா!

ப்ரோமோஷன் பணி

நடிகை சமந்தா நடிப்பில், ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’. பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதன் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.

ட்விட்டர் பதிவு

இந்நிலையில், நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரொம்ப பதட்டமாக உள்ளேன். இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. என்னை போலவே என் படக்குழுவினரும் நாளை உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Related posts