நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது. இதில் முதற்கட்டமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 1ம் தேதி அறிவித்துள்ளது. இதன்படி, வருகிற 13ம் தேதி முதல் சுதந்திர தினமான 15ம் தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பறக்கச் செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார். மேலும், தனது ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள், பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தேசியக்கொடியை முகப்பு படமாக அவர் மாற்றியுள்ளார்.

