பிரபல நடிகர்
முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என தமிழ் திரையுலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் தற்போது ‘சந்திரமுகி 2’ ‘ருத்ரன், ‘அதிகாரம்’, ‘துர்கா’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இதில் பி. வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இன்று ராகவா லாரன்ஸ் தனது 46 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதனையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
I’m extremely happy to take blessings from Thalaivar and Guru on my birthday. Every year I decide to do some service, This year I’m planning to do #Annadhanam as I know the value of hunger. I will visit places personally and distribute food whenever I can. I need your blessings! pic.twitter.com/fCusDt2Taw
— Raghava Lawrence (@offl_Lawrence) October 29, 2022

