ரஜினியுடன் சந்திப்பு
தொன்ம கதையை மையமாக வைத்து கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கிய திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இப்படம் வெற்றி பெற்றதால் இதனை தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்பெயரில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி காந்தாரா படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் ரசிகர்களுடன் நல்ல வரவேற்பை பெற்றதுடன், திரைப்பிரபலங்களும் பாராட்டினர்.
இதனிடையே காந்தாரா திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில், காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, நடிகர் ரஜினியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார்.
ನೀವು ಒಂದ್ ಸಲ ಹೊಗಳಿದ್ರೆ.. ನೂರು ಸಲ ಹೊಗಳ್ದ೦ಗೆ ನಮಗೆ.❤️ಧನ್ಯವಾದಗಳು @rajinikanth sir ನಮ್ಮ ಕಾಂತಾರ ಚಿತ್ರ ನೋಡಿ ನೀವು ಮೆಚ್ಚಿದ್ದಕ್ಕೆ ನಾವು ಸದಾ ಆಭಾರಿ🙏🏼 #Kantara @VKiragandur @hombalefilms @gowda_sapthami @Karthik1423 pic.twitter.com/MNPSDR5jx8
— Rishab Shetty (@shetty_rishab) October 28, 2022

