சினிமாதமிழ்நாடு

விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து!

வாழ்த்து

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 6 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த இவர் கடந்த ஜூன் மாதம் அவரை திருமணம் செய்துகொண்டார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். பின்னர் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் வெளிநாடுகளுக்கு தேனிலவு சென்று புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு வந்தனர். இதனிடையே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினருக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பியுள்ளார்.

Related posts