ட்விட்டர் வாழ்த்து
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதனைத்தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட படங்களை இயக்கியதின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜாவை முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் நேரில் சென்று சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நலம் பெற்று வீடு திரும்பிய திரு. பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். (1/3)
— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2022