சினிமாவெள்ளித்திரை

இணையத்தை கலக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படம்!

வைரல் புகைப்படம்

வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இவர் புத்தர் சிலை முன்பு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புயலுக்கு முன் அமைதி’ என குறிப்பிட்டுள்ளார்.

Related posts