Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஊர் புகுந்து அடாவடி… யார் பெரிய ஆள் என அட்டூழியம்… 3 பேருக்கு கத்திக்குத்து…

ஊர் புகுந்து அடாவடி… யார் பெரிய ஆள் என அட்டூழியம்… 3 பேருக்கு கத்திக்குத்து…

March 22, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து விழுந்த சம்பவத்தில் நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் 27 வயதான சிவா. பக்கத்து ஊரான சிறுகுடியில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் 23 வயதான பிரதீப். கடந்த மாதம் இவர்கள் இருவருக்கும் இடையே வாகனம் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முன்விரோதத்தில் மோதல் போக்கு இருந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவில் சிவா, தனது வேனில் சிறுகுடி கல்யாண மண்டபத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளார். பொருட்களை இறக்கிவிட்டு பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்திரா நகர் வழியாக சென்றபோது பிரதீப் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேனை மறித்துள்ளார். ஆனால், பிரதீப்பின் ஏரியாவுக்குள் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று சிவா தனது வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இருந்தபோதும் ஆத்திரமடைந்த பிரதீப் தனது நண்பர்களுடன் தேத்தாம்பட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சிவா மற்றும் அவருடன் வண்டியில் வந்தவர்களுடன் பிரதீப் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்க :  பேரறிவாளன் விடுதலை விவகாரம் - முதல்வர் சந்திப்பு ! காங்கிரஸை சாடும் குஷ்பு !

அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. திடீரென பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியை எடுத்து எதிர் தரப்பினரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், சிவாவின் உறவினர் சிவமணி மற்றும் சண்டையை விலக்கிவிட வந்த சின்னச்சாமி, சக்தி ஆகியோருக்கு தலை, இடுப்பு, தொடை உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. பின்னர், இதில் படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இதையும் படிக்க :  தமிழக மீனவர்கள் கைது - முதலமைச்சர் எழுதிய அவசர கடிதம் !

அதேவேளையில் தேத்தாம்பட்டியைச் சேர்ந்த சிவமணி தரப்பினர் தாக்கியதில் சிறுகுடியைச் சேர்ந்த சரவணன், பொன்னையா, அருண்குமார் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து இரு தரப்பினரும் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இரு தரப்பினரையும் சேர்ந்த சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுகுடி மற்றும் தேத்தாம்பட்டி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்விரு கிராம இளைஞர்களுக்கு இடையே யார் பெரிய ஆளு? என்று அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஆணவப் போக்கில் சில இளைஞர்கள் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகொலை வழக்கில் கணவன் – மனைவி கைது… முறையற்ற தொடர்பால் விபரீதம்
Next Article நெல்லையப்பர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.