நெல்லை நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையின் நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்றைய தினம் வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளம் இசைக்க பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் பால் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 25 ஆம் தேதி வேணுவனத்தில் வேணு நாதர் தோன்றிய வரலாற்று திருவிளையாடல் நிகழ்வும், 31 ஆம் தேதி பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

