ரீல்ஸ் மோகத்தால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையை பெண் ஒருவர் வீடியோ எடுத்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலையை சேர்ந்த கீதா என்ற பெண், குமாரக் கோயில் கருவறை உள்ளிட்ட இடங்களை ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மறைவதற்குள், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையை ரீல்ஸ் எடுத்து, அடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் மற்றொரு இளம்பெண்.
கோயிலில் ரீல்ஸ் வீடியோக்களை எடுக்க தடை என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

