Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»வயதானாலும் சிலருக்கும் மட்டும் முடி நரைக்காமல் இருப்பது ஏன்? ரகசியம் இதுதான்!

வயதானாலும் சிலருக்கும் மட்டும் முடி நரைக்காமல் இருப்பது ஏன்? ரகசியம் இதுதான்!

March 15, 20262 Mins Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் அடிவைக்கும் போதே, இன்றைய சூழலில் பலருக்கு அங்கொன்று இங்கொன்று என நரை முடி எட்டிப்பார்க்க தொடங்கிவிடுகிறது. கண்ணாடி முன்னால் நின்று தலை வாரும் போது தென்படும் அந்த முதல் வெள்ளை முடி, நமக்குள் ஒருவித பதற்றத்தை உண்டாக்குவது இயல்பு.

அதே சமயம், நம்மை சுற்றி அறுபது வயதை கடந்த சிலரை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அவர்களுக்கு மட்டும் முடி எப்படி இன்னும் நரைக்காமல் கருகருவென அடர்த்தியாக இருக்கிறது என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழும்.

“வயதானாலும் அவர்களுக்கு இல்லையே, இந்த சிறிய வயதிலேயே நமக்கு வந்துவிட்டதே” என்று நாம் பலமுறை யோசித்து சங்கடப்பட்டிருப்போம். உண்மையில், முடி நரைப்பது என்பது வெறும் வயதோடு மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல என்கிறது ஆய்வுகள். நாம் உண்ணும் உணவு, நம் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் நம் உடலின் உள் இயக்கம் ஆகிய அனைத்தும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதன் வெளிப்படையான சான்றுதான் நம் முடியின் நிறம். அப்படி, சிலருக்கு மட்டும் முடி நரைக்காமல் இருக்க பின்னணியில் இருக்கும் அறிவியலும், வாழ்க்கைமுறை ரகசியங்களும் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க…

மரபணு அமைப்பு: முடி நரைப்பதில் மரபணுக்கள் (Genetics) மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. முடியின் நிறத்திற்கு காரணமான ‘மெலனின்’ (Melanin) நிறமியை உற்பத்தி செய்யும் செல்கள், சிலருக்கு நீண்ட காலத்திற்கு சுறுசுறுப்பாக இருக்கும்படி அவர்களின் மரபணுக்கள் அமைந்திருக்கும்.

இதையும் படிக்க :  கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கும் 8 பழங்கள்!

உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு வயதான காலத்திலும் முடி கருமையாக இருந்தால், உங்களுக்கும் அதேபோல் முடி நரைக்காமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இது முழுக்க முழுக்க பாரம்பரியமாக கடத்தப்படும் ஒரு விஷயமாகும்.

குறைவான மன அழுத்தம்: தீராத மன அழுத்தம் நரை முடிக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. மன அழுத்தத்தின் போது உடலில் சுரக்கும் ‘கார்டிசோல்’ (Cortisol) போன்ற ஹார்மோன்கள், முடியின் நிறமியை உற்பத்தி செய்யும் செல்களைப் பாதிக்கின்றன என How stress causes gray hair என்ற தலைப்பில் வெளியான NIH ஆய்வு கூறுகிறது.

ஆனால், அன்றாட வாழ்வில் மனதை அமைதியாகவும், சமநிலையிலும் வைத்திருப்பவர்களுக்கு முடி நரைப்பது தள்ளிப்போகிறது. யோகா, உடற்பயிற்சி அல்லது பிடித்தமான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பவர்களுக்கு முடியின் ஆரோக்கியம் நீண்ட காலம் நீடிக்கிறது.

ஆரோக்கியமான குடல் இயக்கம்: நமது குடல் ஆரோக்கியத்திற்கும் முடியின் நிறத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின் B12, இரும்புச்சத்து, செம்பு மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை உடல் சரியாக உறிஞ்சுவதற்கு ஆரோக்கியமான குடல் அவசியம். செரிமான மண்டலம் சீராக இருப்பவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களுக்கு சரியாக சென்றடையும். இதனால் நிறமி செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

இதையும் படிக்க :  ஹிந்தி திரைப்பிரபலங்களுக்கு கொரோனா தொற்று; 4வது அலை அபாயம்!

ஆக்சிஜனேற்ற அழுத்தம் குறைவாக இருத்தல்: உடலில் சேரும் நச்சுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளால் செல்கள் பாதிப்படைவதை ‘ஆக்சிஜனேற்ற அழுத்தம்’ என்கிறோம். பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்பவர்களுக்கு உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருக்கும். இவை செல்கள் சிதைவடைவதை தடுத்து, முடி நரைப்பதை தாமதப்படுத்துகின்றன. புகைப்பிடித்தல் மற்றும் அதிகப்படியான வெயிலில் அலைவதை தவிர்ப்பதும் இதற்கு உதவும்.

சமநிலையான ஹார்மோன்கள்: ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் சமநிலை முடியின் அடர்த்தி மற்றும் நிறத்தை பராமரிக்க உதவுகிறது. ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும்போது முடி மெலிவதும், நிறம் மாறுவதும் நிகழ்கிறது. முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் ஹார்மோன்களைச் சீராக வைத்திருப்பவர்களுக்கு நரை முடி சீக்கிரம் வராது.

சீரான தைராய்டு செயல்பாடு: தைராய்டு சுரப்பி நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. தைராய்டு சுரப்பில் குறைபாடு குறிப்பாக, Hypothyroidism உள்ளவர்களுக்கு முடி சீக்கிரம் நரைக்க வாய்ப்புண்டு. முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் சரியான ஊட்டச்சத்து மூலம் தைராய்டு ஆரோக்கியத்தைப் பராமரிப்பவர்களுக்கு முடியின் இயற்கையான நிறம் நீண்ட நாட்களுக்கு மாறாமல் இருக்கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசாட்டை துரைமுருகனை அவதூறாக பேசிய நபருக்கு சரமாரி அடி – நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பரபரப்பு
Next Article கோடை வெயிலை சமாளிக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதும் – ஆய்வு சொல்வது இதுதான்!

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
ஃபிட்னஸ்

கை நடுக்கம் பிரச்சனை? காரணமாகும் 3 வைட்டமின் குறைபாடுகள்!

March 25, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,984 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,984 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.