Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»டி20 உலகக்கோப்பை 2026: வாழவா, சாவா ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

டி20 உலகக்கோப்பை 2026: வாழவா, சாவா ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

February 25, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்சமயம் சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, தசுன் ஷன்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதால், எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

நியூசிலாந்து அணி

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணி முதல் ஆட்டத்தில் விளையாட இருந்த நிலையில், அந்த போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இது நியூசிலாந்து அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை சிக்கலாக்கியுள்ளது.

இதனால் இன்ரைய போட்டியில் அந்த அணி கட்டாயம் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது அணியின் பேட்டிங்கில் ஃபின் ஆலன், டிம் செஃபெர்ட், கிளென் பிலீப்ஸ், டேரில் மிட்செல் உள்ளிட்டோரும், பவுலிங்கில் மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், ஜேக்கப் டஃபி உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க :  ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை - ஸ்டாலின் அதிரடி!

இலங்கை அணி

மறுபக்கம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், இலங்கை அணிக்கு எதிராக தோல்வியை தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்கிறது. இதில் இலங்கை அணி தோல்வியடையும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் என்பதால் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம்.

அணியின் பேட்டிங்கில் பதும் நிஷங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் ஆகியோரும், பவுலிங்கில் தில்ஷன் மதுஷங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணியின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியமாகும்.

நேருக்கு நேர்

இதையும் படிக்க :  கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா விளாசலில்: சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது நியூஸி.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி 11 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கொழும்பில் உள்ள பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 64 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 27 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 36 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை தகவல்கள்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபுதுவை பள்ளி மாணவிகளுக்கு மார்ச் 8 முதல் HPV தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை இயக்குநர்
Next Article தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு : தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகை

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.