Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு; ரஜினிகாந்த் முக்கிய கோரிக்கை

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு; ரஜினிகாந்த் முக்கிய கோரிக்கை

February 22, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெறும் அணியினர், பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தார்.

நடிகர் சங்கத் தேர்தலைப் போல தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், தற்போதைய பொறுப்பாளர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக 2026- 29ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் இன்று காலை 8 மணி முதல் சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வருகிறது.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுபெறும். தொடர்ந்து 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிடுகின்றனர்.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் சமந்தா பட ட்ரைலர்!

இந்த நிலையில், இன்று காலை முதலே சங்க உறுப்பினர்களான நடிகர்கள் ஆர்யா, நாசர், மன்சூர் அலிகான், பிரகாஷ்ராஜ், ரஞ்சித், இயக்குநர்கள் பாண்டிய ராஜன், சுந்தர் சி, சமுத்திரக்கனி; தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மு.க.தமிழரசு, ராஜன்; இயக்குநர் டி.ராஜேந்திரன், நடிகைகள் குஷ்பூ, தேவயானி, சுஹாசினி மற்றும் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். இதில் மொத்தம் 1524 பேர் ஓட்டுரிமை பெற்றுள்ள நிலையில், ஒரு மணி நிலவரப்படி, 630 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

வாக்களித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, “தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, வெற்றி பெறும் அணி தயாரிப்பாளர்களுக்கான முக்கியமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். சரி செய்வார்கள் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  வெளியானது சிவகார்த்திகேயன் பட மூன்றாவது பாடல்!

தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் டி.ராஜேந்திரன், “தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டேன். நம்பரை பார்த்து ஓட்டுப் போடுபவன் நான் இல்லை. நண்பரை பார்த்து தான் ஓட்டுப் போடுவேன்” என்றார்.

அதன்பின்னர் பேசிய தயாரிப்பாளர் அருண்பாண்டியன், “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மிக முக்கியமான சங்கம். நிச்சயமாக ஒரு பலம் வேண்டுமென ஆரம்பத்திலிருந்து நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு மாதிரி எல்லாம் அமைதியாக இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருந்தால், கண்டிப்பாக தமிழ்த் திரைப்படம் மிக மிக உறுதியாக இருக்கும். அண்டை மாநிலத்தில் தயாரிப்பாளர் சங்கங்கள் மிக ஒற்றுமையுடன் உள்ளனர். இந்த சங்கம் இனிமேலும் நன்றாக இருக்கும்” என நம்புகிறேன்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவடசென்னையில் களம் காண விஜய் முடிவு? – பெரம்பூரில் போட்டியிட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
Next Article உலகளாவிய மாரடைப்பு இறப்புகளில் 5-ல் 1 இந்தியாவில் நிகழ்கிறது! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.