Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும்’ – கே.என்.நேருவை முன்வைத்து அரசியல் தலைவர்கள் விமர்சனம்

‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்து விழும்’ – கே.என்.நேருவை முன்வைத்து அரசியல் தலைவர்கள் விமர்சனம்

February 21, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அமைச்​சர் கே.என்​.நேரு மீது வழக்​குப் ​ப​திய உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்​து, ‘திமுக அரசின் ஊழல் கோட்டை இடிந்​து​ விழும்; கவுண்​ட​வுன் தொடங்​கி​விட்​டது’ என அரசி​யல் தலை​வர்​கள் விமர்​சித்​துள்​ளனர். இதற்கு திமுகவும் எதிர்வினையாற்றியுள்ளது.

தமிழக அரசின் நகராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 பொறி​யாளர்​கள் மற்​றும் அதி​காரி​களை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்​சம் முதல் ரூ.35 லட்​சம் வீதம் மொத்​தம் ரூ.888 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்​பட்​ட​தாக சம்​பந்​தப்​பட்ட துறை​யின் அமைச்​சர் உள்ளிட்​டோர் மீது வழக்கு பதிவு செய்​யும்​ படி தமிழக காவல்​துறையின் லஞ்ச தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் ஆணை​யிட்​டுள்​ளது. இது தொடர்​பாக அரசி​யல் தலை​வர்​கள் வெளியிட்​டுள்ள கருத்துகள்:

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்:

“திமுக அமைச்​சர் நேரு, அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகார் மீதும் கூடிய விரை​வில் வழக்கு பதிந்​து, உண்மை வெளிக்​கொணரப்​படும் என்​னும் நம்​பிக்​கையை இந்த நீதி​மன்ற உத்​தரவு ஏற்​படுத்​துகிறது.

மொத்​தத்​தில், மக்​கள் வரிப்​பணத்தை உறிஞ்​சி, கமிஷனில் கொழுக்​கும் திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்​குநூறாக இடிந்து விழும் நாளுக்​கான கவுண்​ட​வுன் இன்​று தொடங்​கி​விட்​டது.”

பாமக தலை​வர் அன்​புமணி:

“திமுக​வின் ஊழல் கோட்டை இடிந்து தரைமட்​ட​மாகும். அதனால் மக்​கள் மத்​தி​யில் ஏற்​படும் அதிர்​வு​களால் வரும் தேர்​தலில் திமுக அடியோடு துடைத்து எறியப்​படும்.”

இதையும் படிக்க :  ரஜினிகாந்த் சமூதாய பொறுப்பாளர் - அன்புமணி ராமதாஸ்!

பாஜக முன்​னாள் மாநில தலை​வர் தமிழிசை:

“அமைச்​சர் நேரு​வின் ஒரு துறை​யில் மட்​டுமே ரூ.2,300 கோடி ஊழல் என்​றால் குற்​றம்​சாட்​டப்​பட்ட அமைச்​சர்​கள் அத்​தனை பேரும் செய்​திருக்​கின்ற ஊழல்​களை கணக்​கிட்​டால் மக்​களே உங்​கள் பணம் எவ்​வளவு சுரண்​டப்​பட்டு இருக்​கிறது என்​பதை நீங்​கள் புரிந்து கொள்ள வேண்​டும். மக்​களின் பணம் பாது​காக்​கப்பட வேண்​டும் என்​றால் நிச்​சய​மாக தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வர வேண்​டும்.”

பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை:

“தெளி​வான ஆதா​ரங்​களு​டன், அமலாக்​கத்துறை கடிதம் அனுப்​பி​யும், அமைச்​சர் கே.என்​.நேரு மீது வழக்​குப் பதிவு செய்​யாமல் இருந்த முதல்​வர் ஸ்டா​லின் தற்​போது என்ன பதில் கூறப் போகிறார். திமுக ஆட்​சி​யில், ஒரு ஆண்​டில், ஒரு துறை​யில் மட்​டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்​திருக்​கிறது என்​றால், தமிழகம் என்ன நிலை​யில் இருக்​கிறது?”

தவெக தலை​வர் விஜய்:

”கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1,020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

இதையும் படிக்க :  இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளையமன்னர், திரு.ஆதித்ய சேதுபதி அவர்கள் தமிழக பாரதிய ஜனதா இளைஞரணியின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஊழல் மலிந்த ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1,000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1,020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர்.”

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅமித் ஷா பற்றி அவதூறு பேச்சு: ராகுல் காந்தி வாக்குமூலம் பதிவு
Next Article கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.