Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இது நிதிநிலை அறிக்கையா ? அல்லது தமிழக அரசின் செய்திக்குறிப்பா ? – டிடிவி தினகரன் கேள்வி

இது நிதிநிலை அறிக்கையா ? அல்லது தமிழக அரசின் செய்திக்குறிப்பா ? – டிடிவி தினகரன் கேள்வி

February 17, 20263 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் புகழும் பெருமையும் மட்டுமே நிறைந்திருப்பதை பார்க்கும்போது, இது நிதிநிலை அறிக்கையா அல்லது தமிழக அரசு அன்றாடம் வெளியிடும் செய்திக் குறிப்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தமிழகத்திற்கு அறிவிக்க வேண்டிய திட்டங்களை அடுக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யப்போகும் இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆஹா ஓஹோ என்று இருக்கும் எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு வழக்கம் போல ஏமாற்றத்தையே பரிசாக வழங்கியுள்ளது.

தமிழ் மொழி வளர்ச்சியில் தொடங்கி, இலங்கைத் தமிழர், குழந்தைகள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் திருநங்கைகள் நலன் என தலைப்பிட்ட பக்கங்கள் அனைத்திலும் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் புகழும் பெருமையும் மட்டுமே நிறைந்திருப்பதை பார்க்கும் போது இது நிதிநிலை அறிக்கையா அல்லது தமிழக அரசு அன்றாடம் வெளியிடும் செய்திக் குறிப்பா என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், சட்டவிரோத மது விற்பனை, கட்டப்பஞ்சாயத்து மற்றும் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் என திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் குற்றச்சம்பவங்களின் தலைநகரமாக மாறிவரும் தமிழகத்தை இந்தியாவின் அமைதியான மாநிலம் என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பக்கம் பக்கமாக வர்ணித்திருப்பது வெட்கக்கேடனாது.

இதையும் படிக்க :  உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு !

அடிப்படை வசதியில்லாத அரசுப் பள்ளிகள், அவலநிலையில் காட்சியளிக்கும் மருத்துவமனைகள், மக்களுக்கு பயனளிக்காத அரசு அலுவலகங்கள் என ஒரு அரசு நிர்வாகம் எப்படியெல்லாம் இயங்கக்கூடாது என்பதற்கு தலைசிறந்த உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, தனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பான இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்காமல் அடியோடு புறக்கணித்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.

உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள், உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கக் கோரி ஊராட்சிச் செயலாளர்கள் ஊதிய உயர்வு கோரி கௌரவ விரிவுரையாளர்கள் என தலைநகர் சென்னையின் நாலாபுறமும் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாழ்வாதார போராட்டங்களில் ஒலிக்கும் குரல் சட்டமன்றத்திற்குள் மட்டும் கேட்காமல் போனது ஏன் என தெரியவில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் செயல்படுத்தாமல், கடனை மட்டுமே வாங்கி குவித்து இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்த திமுக அரசு, தற்போது தாக்கல் செய்திருக்கும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் மேலும் ரூ.1,79,809 கோடி கடன் வாங்க திட்டமிட்டிருப்பதன் மூலம் திமுக அரசுக்கும், நிர்வாகத் திறமைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் மூலதனச் செலவு, அதற்கு எதிர்ப்பாதையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிதிப்பாற்றாக்குறை என திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க மத்திய அரசின் மீது பழியை போட்டு மக்களை திசை திருப்பி தப்பிக்க முயலும் பழையை டெக்னிக்கையே கையில் எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படிக்க :  தேர்தலில் வாக்களிக்க விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்றது ஏன்? - தவெக நிர்வாகி நிர்மல்குமார் விளக்கம்

மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீட்டை வழங்காத திமுக அரசு, வேளாண்மை இடைக்கால நிதிநிலை அறிக்கை எனும் பெயரில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எந்தவகையிலும் உதவாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. பழைய பல்லவியையே பாடுவதைப் போல, அரைத்த மாவையே அரைப்பது போல தயாரிக்கப்பட்டிருக்கும் வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கையை விமர்சனம் செய்வதற்கு கூட இடமளிக்காத அளவிற்கு தயாரிக்கப்பட்டிருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது.

இறுதியாக, தமிழக நிதியமைச்சர் இரண்டு மணி நேரங்களை கடந்து வாசித்த 159 பக்கங்களை கொண்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், எப்போது வாசித்து முடிப்பார் என காத்திருக்க வைத்த வேளாண் இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், எத்தனை முறை படித்துப் பார்த்தாலும், மக்களுக்கான எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மக்களுக்கு பணியாற்ற கிடைத்த நல்வாய்ப்பை தங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்ட திமுக அரசு இன்று தாக்கல் செய்திருப்பது இடைக்கால நிதிநிலை அறிக்கை அல்ல இறுதி அறிக்கை என்பதை வரும் சட்டமன்றத் தேர்தல் உணர்த்தும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதுருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள புதிய படம்
Next Article அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.