விஜயின் சுற்றுப்பயணம் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை, தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார்.
இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது.
விஜய் எந்த தேதியில் எங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. செப். 13, 2025 – திருச்சி, பெரம்பலூர், அரியலூர்
2. செப். 20, 2025 – நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
3. செப். 27, 2025 – திருவள்ளூர், வட சென்னை
4. அக்.4 மற்றும் அக்.5, 2025 – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
5. அக். 11, 2025 – கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி
6. அக். 18, 2025 – காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
7. அக். 25, 2025 – தென்சென்னை, செங்கல்பட்டு
8. நவ.1, 2025 – கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
9. நவ.8, 2025 – திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
10. நவ.15, 2025 – தென்காசி, விருதுநகர்
11. நவ.22, 2025 – கடலூர்
12. நவ. 29, 2025 – சிவகங்கை, ராமநாதபுரம்
13. டிச.6, 2025 – தஞ்சை, புதுக்கோட்டை
14. டிச.13, 2025 – சேலம், நாமக்கல், கரூர்
15. டிச. 20, 2025 – திண்டுக்கல், தேனி, மதுரை
இதில் விஜய் சுற்றுப்பயணம் அனைத்து நாட்களுமே சனிக்கிழமை ஆகும். அக்டோபர் 5ம் தேதி மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஆகும். விஜய்யின் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயண விவரம் காவல்துறையின் அனுமதி காரணமாக இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அனுமதி கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

