Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»செஃபெர்ட், ஆலன் சாதனை பார்ட்னர்ஷிப் – தொடர் வெற்றிகளை குவித்து நியூசிலாந்து ஆதிக்கம்

செஃபெர்ட், ஆலன் சாதனை பார்ட்னர்ஷிப் – தொடர் வெற்றிகளை குவித்து நியூசிலாந்து ஆதிக்கம்

February 10, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற யுஏஇ அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்ததது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் ஆர்யான்ஷ் சர்மா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது வசீம் மற்றும் அலிஷான் ஷராஃபு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.

இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களை பதிவு செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். அதன்பின் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 55 ரன்களில் அலிஷான் ஷராஃபு விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.

இதையும் படிக்க :  கால் டாக்ஸி டிரைவர் டூ இத்தாலி கிரிக்கெட் அணி: அசத்தும் இந்திய வம்சாவளி வீரர் ஜஸ்பிரீத்

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது வசீம் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 66 ரன்களை சேர்த்திருந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலிருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செஃபெர்ட் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலனும் 27 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார். அதன்பின்னரும் அதிரடியைக் கைவிடாத இருவரும், இறுதிவரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், 175 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலமாகவே எடுத்தும் சாதனை படைத்தனர்.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் செஃபெர்ட் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், ஃபின் ஆலன் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 84 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தியது.

இதையும் படிக்க :  ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதி​ராக தென் ஆப்பிரிக்கா அணி எளிதான வெற்றி

இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்து, குரூப் டி பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த டிம் செஃபெர்ட் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதுதவிர இந்த போட்டியில் டிம் செஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் இருவரும் இணைந்து 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை அமைத்த ஜோடி என்ற சாதனையை டிம் செஃபெர்ட் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோர் படைத்துள்ளனர்.

இதற்கு முன் கடந்த 2022ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் ரைலீ ரூஸோவ் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் இணைந்து 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது நியூசிலாந்து வீரர்கள் முறியடித்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறாரா தோனி? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில்
Next Article “தேமுதிக உடன் பேச்சு நடக்கிறது” – அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.