Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, May 6
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி

September 15, 20252 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், அதன் பின்னர் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை ஆகியவற்றால் பாகிஸ்தானுடனான நமது நாட்டின் உறவு சீர்குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்து வீச்சை பாகிஸ்தான் அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் எடுத்திருந்தது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிக்க :  ஆசிய கோப்பை ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி போராடி வெற்றி

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கி அதகளமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் 13 பந்துகளில் 31 ரன்களையும் சுப்மன் கில் 17 பந்துகளில் 10 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி இணைந்து நிலைத்து நின்று ரன்களை விறுவிறுவென குவித்தது. திலக் வர்மா, 31 பந்துகளில் 31 ரன்களைக் குவித்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து சூர்யகுமார் யாதவுடன் ஷிவம் துபே கை கோர்த்தார்.

இதையும் படிக்க :  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடரை வெல்லுமா இந்திய அணி

இந்திய அணி 15.5 வது ஓவரிலேயே வெற்றி இலக்கான 128 ரன்களை தாண்டி 131 ரன்களை, 3 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இதனையடுத்து பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 37 பந்துகளில் 47 ரன்கள், ஷிவம் துபே 7 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணியின் சயீம் அயூப், இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நாடு முழுவதும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடைபெறும் சூழ்நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.

asia cup India Pakistan India Win t20
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு இன்ஜினியர்கள் முக்கிய பங்களிக்கின்றனர்
Next Article மும்பையில் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,505 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,012 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,971 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.