Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»வீட்டு வாசலில் ஃபைனான்சியர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் கொலை செய்த கும்பல் சிக்குமா…?

வீட்டு வாசலில் ஃபைனான்சியர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் கொலை செய்த கும்பல் சிக்குமா…?

February 2, 20262 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தேனியில் ஃபைனான்சியரை பட்டப்பகலில் அவரது வீட்டு வாசலில் வைத்து, மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் நியூ ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. 72 வயதான இவர் தனது மனைவி வசந்தாவுடன் தனியாக வசித்து வந்தார். இந்த தம்பதியின் மகன் மற்றும் மகள்களுக்குத் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வெளியூரில் வசிக்கின்றனர். பழக்கடை வைத்துள்ள முதியவர் பாண்டி, ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். அத்துடன், ஊருக்குள் பலருக்கு வார வட்டி மற்றும் மாத வட்டிக்கும் பணம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் காலை நேரத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கச் செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
அதற்காக, வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட வண்டியை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், பாண்டியின் பின்புறம் இருந்து அவரது கழுத்தில் அரிவாளால் ஓங்கி வெட்டியுள்ளனர். அடுத்தடுத்து, சரமாரியாக வெட்டியதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவாறு அப்படியே சரிந்து விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த பாண்டி நிலைகுலைந்ததை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தவர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறிது நேரத்தில் அவ்வழியாக சென்றவர்கள் ஃபைனான்சியர் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி, கதறி துடித்துள்ளார்.
தகவலறிந்து வந்த தேனி நகர போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் சென்ற வழித்தடத்தை கண்டறியும் பணி நடைபெற்றது.
அத்துடன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ பிரியா, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தொழில் போட்டி காரணமாக ஃபைனான்சியர் பாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரான் மீது தாக்குதல்… பிராந்திய அளவிலான போர் வெடிக்கும்.. டிரம்புக்கு கமேனி எச்சரிக்கை!
Next Article புதுச்சேரியில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: அரசு மருத்துவமனையை கண்டித்து மறியல்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.