கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
* ஒருநபர் ஆணைய விசாரணை தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உயரதிகாரிகள், IAS அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
* அரசு தரப்பு நியாயத்தை மட்டும் உள்துறை செயலர் பேசியது ஏன்?
* தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ஐகோர்ட் கடுமையான வார்த்தைகளை கூறியது.
* விசாரணையே இல்லாமல் தவெக மீது தான் தவறு என்பது போல் ஐகோர்ட் உத்தரவிட்டது.
* எங்களுக்கு வழக்கறிஞர்கள் கிடைக்கக்கூடாது என்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன.
* மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் தவெக மீது தான் தவறு என கூறுவார்கள்.
* தவெகவிற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* தவெக மாவட்ட செயலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். த.வெ.க.வை முடக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

