தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவுடன் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்ளுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

