வைரல் டீசர்
‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதனையடுத்து வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். மேலும், யுத்தம் செய், முரண், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், ‘தமிழ்க்குடிமகன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

