பதவிப் பிரமாணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி இன்று காலை 9.30 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். இவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வாழ்த்து
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியாக நினைக்காமல், பொறுப்பென்று நினைக்க வேண்டும். மேலும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

