அமைச்சர் பதவி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற குரல் வலுப்பெற்று வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
கடைசி படம்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, ‘மாரி செல்வராஜ் இயக்ககத்தில், நான் நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் தான் எனது கடைசி படமாக இருக்கும். இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. மேலும், கமல்ஹாசன் தயாரிப்பில் நான் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன்’ என கூறியுள்ளார்.

