புதிய அப்டேட்
வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் கவனம் ஈர்த்தது. அண்மையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.
We are extremely delighted 🤩 on bagging the overseas theatrical rights of #THUNIVU 💥 produced by @BoneyKapoor & @ZeeStudios_
It’s always a pleasure 😌 to associate with our dear #AjithKumar 😎#ThunivuPongal 💥 #NoGutsNoGlory 💪🏻✨ #HVinoth @BayViewProjOffl @mynameisraahul pic.twitter.com/eFzZnPLJlf
— Lyca Productions (@LycaProductions) November 19, 2022

