லவ் டுடே
2019-ம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘லவ் டுடே’. இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘லவ் டுடே’ தெலுங்கு மொழியில் வெளியிடவுள்ளதாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

