முதல்கட்ட படப்பிடிப்பு
‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் 10 மொழிகளில் 3டி முறையில் உருவாகி வருகிறது.
இந்நிலையில், சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகை திஷா பத்தானி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

