அனைத்து வகையான திரைப்படங்களுக்கும், மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் (சி.பி.எஃப்.சி) சார்பில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.
தணிக்கை சான்றிதழ்
அதன்பெயரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம் . யூஏ சான்றிதழ் என்றால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்க்க வேண்டிய படம் என்றும் மற்றும் அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
விளம்பரங்கள்
இந்நிலையில், சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள் குறித்த விளம்பரங்களில் கட்டாயமாக சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

