ரிலீஸ் தேதி
மாமனிதன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

