வெளியீடு தாமதம்
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக தயாராகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். மேலும், மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 4-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ‘சாகுந்தலம்’ படத்தை 3-டியில் மாற்றம் செய்யவுள்ளதாகவும் இதனால் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

