பிரபல நடிகை
நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடிக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் நிவேதிதா சதிஷ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நிவேதிதா சதிஷ் சில்லு கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன், சுழல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome onboard @nivedhithaa_Sat 👍🏾💪🏾 @dhanushkraja #CaptainMiller #NivedhithaaSathish
@ArunMatheswaran @sundeepkishan @priyankaamohan @gvprakash @SathyaJyothi @CaptainMilIer pic.twitter.com/TgRhmGSc48
— Arun Matheswaran (@ArunMatheswaran) September 20, 2022

