இந்தியாவில் விளையாட்டு தலைநகரமாக சென்னையை மாற்றுவதற்கு முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பேட்டி
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியை அடுத்து தமிழ்நாட்டில் மகளிர் டென்னிஸ் போட்டி நேற்று நடந்து முடிந்துள்ளது. மேலும், தமிழகத்தில் உலக அளவிலான பல்வேறு போட்டிகளை நடத்துவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
அதனைத்தொடர்ந்து விரைவில் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த ஜல்லிக் கட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

