படப்பிடிப்பு நிறைவு
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் வெற்றியை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’ இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
#MAAMANNAN Shooting Wrapped !@mari_selvaraj @RedGiantMovies_ @Udhaystalin @KeerthyOfficial @arrahman #Vadivelu #FahadhFaasil @thenieswar @editorselva @kabilanchelliah @dhilipaction @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/FkPKFOTidM
— Udhay (@Udhaystalin) September 14, 2022

