திருச்சிற்றம்பலம்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் படம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாராட்டு
இந்நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘திருச்சிற்றம்பலம் ஓர் அழகான திரைப்படம். நித்யா மேனனின் கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது. படத்தின் கதையை இயக்குனர் மித்ரன் ஜவகர் சிறப்பாக எழுதியுள்ளார். தனுஷ்- அனிருத்தின் கூட்டணி வழக்கம் போல் சிறப்பாக உள்ளது. பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
#Thiruchitrambalam.A Beautiful movie❤️The beauty is in lovely moments that follow the painful ones.@MenenNithya ‘s character & superb performance seizes hearts,the writing by @MithranRJawahar as well.#DNA at their best as usual. Love to @offBharathiraja @prakashraaj & whole team
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 1, 2022

