சினிமாவெள்ளித்திரை

கவனம் பெறும் சந்தானம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் !

பர்ஸ்ட்லுக் போஸ்டர்

‘குலுகுலு’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் ‘கிக்’. கன்னடத்தில் லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என்ற இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ‘கிக்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

 

Related posts